நிர்வாக காரணங்கள், அச்சுறுத்தலால் சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றம்

மதுரை: 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்கள், அச்சுறுத்தலால் சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து மாற்றப்பட்டதாக சிறைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்தும் நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக மதுரை ஐகோர்ட், சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே அவமதிப்பு வழக்கு பதிவு செய்திருந்தது.

சவுக்கு சங்கர் மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்த பிறக்கும் யூடியூப் சேனலில் இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கும் மதுரை ஐகோர்ட்டு பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சிறப்பு அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அதில் நீதித்துறையை அவதூறாக விமர்சித்த வழக்கில் அவமதிப்பு நடவடிக்கையாக சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு சவுக்கு சங்கரை சிறையில் அடைத்தது

இந்நிலையில் நிர்வாக காரணங்கள் மற்றும் அச்சுறுத்தலால் சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: