×

சென்ட்ரல் - ரேணிகுண்டா இடையே 130-145 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்: பொதுமக்களுக்கு ரயில்வே எச்சரிக்கை

சென்னை: சென்ட்ரல் - ரேணிகுண்டா இடையே சோதனை ஓட்டம் நடைபெறவதால் பொதுமக்கள் ரயில்பாதையை கடக்கவோ, நெருங்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை சென்ட்ரல் - ரேணிகுண்டா இடையே ரயில்களை வேகமாக இயக்குவதற்காக பணிகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து பயணிகள் ரயில்களை அதிகபட்சம் 130 முதல் 145 கிலோ மீட்டர் வேகம் வரை இயக்கும் வகையில் இருப்புப் பாதை தகுதி பெற்றுள்ளதா என்பதை அறிய சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் - ரேணிகுண்டா ரயில் பாதையில் சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது.

இதையடுத்து சென்னை சென்ட்ரலிலிருந்து ரேணிகுண்டா வரை காலை 10.30 மணியிலிருந்து பிற்பகல் 12.30 மணி வரையும், அதோபோன்று மறு மார்க்கமாக பிற்பகல் 12.45 மணியிலிருந்து 2.45 மணி வரையும் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே சென்னை சென்ட்ரல் - ரேணிகுண்டா ரயில் பாதையில் வசிக்கும் பொது மக்கள், தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலே குறிப்பிடப்பட்டுள்ள நேரங்களில் ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : Central - Renikunda , 130-145 km between Central - Renikunda. Train test run at speed: Railway warning to public
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...