மழைநீர் கால்வாய் பணி காரணமாக தாசப்பிரகாஷ் சாலையில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை: மழைநீர் வடிகால்வாய் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் தாசப்பிரகாஷ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: ஈ.வே.ரா சாலையில் தாசபிரகாஷ் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி செல்லும் திசையில், ஈ.வே.ரா சாலையில் ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பில் நெடுஞ்சாலை துறையினர் சாலையை ஆக்ரமித்து, 17ம் தேதி சனிக்கிழமை இரவு 10 மணி முதல் 19ம் தேதி திங்கள் கிழமை காலை 5 மணி வரை, பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான அலுவல் மேற்கொள்ள உள்ளதால், கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.எனவே 17ம் தேதி சனிக்கிழமை இரவு 10 மணி முதல் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

ஈ.வே.ரா சாலையில் காந்தி இர்வின் மேம்பாலம் சந்திப்பிலிருந்து தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி நேராக செல்லலாம். ஈ.வே.ரா சாலையில் நாயர் பாயின்ட் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஈ.வே.ரா சாலையில் நாயர் பாயின்ட் சந்திப்பிலிருந்து வலது புறம் திரும்பி நாயர் மேம்பாலம், உடுப்பி பாயின்ட், இடது புறம் திரும்பி, காந்தி இர்வின் சாலை, காந்தி இர்வின் சிக்னல் சந்திப்பு, இடது புறம் திரும்பி காந்தி இர்வின் மேம்பாலம் மற்றும் ஈ.வே.ரா சாலை வழியாக செல்லலாம். வாகன ஒட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: