×

நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு சிறப்பு விமானத்தில் வரும் 8 சிறுத்தைகள்

வின்ட்ஹோக்: சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த 1947ம் ஆண்டில் கடைசி சிறுத்தை காணப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு, 1952ம் ஆண்டு சிறுத்தை இனம் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் சிறுத்தை இனம் அழிந்து தற்போது 74 ஆண்டுகளாகும் நிலையில், நமீபியாவில் இருந்து கண்டங்களுக்கு இடையேயான இடமாற்ற திட்டத்தின் கீழ், 8 சிறுத்தைகள் போயிங் சிறப்பு விமானம் மூலம் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விமானத்தின் முன்பகுதியில் அழகிய புலி ஓவியம் வரையப்பட்டுள்ளது. இந்த சிறுத்தைகள் சரக்கு விமானம் மூலம் ஜெய்ப்பூருக்கு கொண்டு வரப்பட்டு, அதே நாளில் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ-பால்பூர் தேசிய பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட உள்ளன. இவற்றில் 2 ஆண், ஒரு பெண் சிறுத்தையை பிரதமர் மோடி தனது பிறந்த நாளான்று பூங்காவின் தனிமைப்படுத்தப்பட்ட அடைப்புகளுக்குள் திறந்து விடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டினியுடன் கொண்டு வரப்படும்
* மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ உயிரியல் பூங்காவில், மின்சார வேலி அமைக்கப்பட்ட பகுதியில் நமிபீயா சிறுத்தைகள் உலா வரும்.
* இதில் 3 ஆண் சிறுத்தை, 5 பெண் சிறுத்தைகள் என மொத்தம் 8 சிறுத்தைகள் உள்ளன.
* விமானத்தில் கொண்டு வரும் போது சிறுத்தைகளுக்கு உணவு எதுவும் வழங்கப்படாது. அவைகளுக்கு மயக்கம் ஏற்படும் என்பதற்காக  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறது.
* அங்கிருந்து விமானத்தில் கொண்டு வருவதற்கு முன்னர் சிறுத்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும்.

Tags : Namibia ,India , 8 leopards from Namibia to India by special flight
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!