×

3 ஓட்டில் எதிர்க்கட்சிகள் வெற்றி ஸ்வீடன் பிரதமர் பதவி விலகினார்

கோபன்ஹேகன்: ஸ்வீடன் நாட்டில் 3 ஓட்டு வித்தியாசத்தில் எதிர்க்கட்சிகள் வென்றதால் பிரதமர் மேக்தலீனா ஆன்டர்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் உள்ள 349 இடங்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. இதில், வலதுசாரி கட்சிகளான தேசியவாத கட்சி, குடியுரிமை எதிர்ப்பு கட்சி 176 தொகுதிகளிலும் இடதுசாரியான ஆளும் சோசலிச ஜனநாயக கட்சி 173 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து, நாடாளுமன்ற சபாநாயகர் ஆன்ட்ரியாஸ் நோர்லெனை சந்தித்த பிரதமர் மேக்தலீனா, தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.

இதனைத் தொடர்ந்து, அல்ப் கிறிஸ்டெர்சன் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க சபாநாயகர் நோர்லென் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, காபந்து பிரதமராக தொடரும்படி மேக்தலீனாவை சபாநாயகர் கேட்டுக் கொண்டுள்ளார். ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரிய மேக்தலீனா, கடந்தாண்டு நவம்பரில் பிரதமராக பதவியேற்ற நிலையில், ஓராண்டு முடிவதற்குள் பதவி விலகி உள்ளார்.

Tags : Swedish , Swedish Prime Minister resigns after opposition wins 3 votes
× RELATED இத்தாலியை துவம்சம் செய்த ஸ்வீடன்: மகளிர் உலக கோப்பை கால்பந்து