அக்னிபாத் திட்டத்துக்கு முழு ஆதரவு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி

டெல்லி: முப்படைகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்யும் ‘அக்னிபாத்’ திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தி வருகிறது. அத்திட்டத்துக்கு பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில், இதுகுறித்து டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது: ‘அக்னிபாத்’ திட்டம் தொடர்பாக ஒன்றிய அரசுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தது.

ஆனால், அந்த திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்த தொடங்கி விட்டதால், அதை முழுமையாக ஆதரிக்கிறோம். திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: