×

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வினேஷ் போகத் வெண்கலம் வென்றார்

பெல்கிரேடு: 17வது உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடந்து வருகிறது. இதில் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த வினேஷ் போகத் இந்திய அணியில் இடம் பிடித்தார். இதில் நேற்று நடந்த மகளிர் 53 கிலோ உடல் எடைப்பிரிவின் தகுதி சுற்றில் காமன்வெல்த் போட்டியில் தொடர்ந்து 3 முறை தங்கப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை வினேஷ் போகத், மங்கோலியாவின் குலான் பட்குயாவை சந்தித்தார்.

இதில் வினேஷ் போகத் 0-7 என்ற புள்ளி கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டார். பின்னர், குலான் பட்குயாக் இறுதி போட்டியை எட்டிய பிறகு, ரெபிசேஜ் சுற்றுக்கு வினேஷ் போகத் முன்னேறினார். ரெப்சேஜ் சுற்றில், வினேஷ் முதலில் கஜகஸ்தானின் எசிமோவாவை விக்டரி பை பால் 4-0 என தோற்கடித்தார், பின்னர் அவரது எதிராளியான அஜர்பைஜானின் லேலா குர்பானோவா காயம் காரணமாக வராததால் அந்த போட்டியில் வென்று, வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த போட்டியில் ஸ்வீடனின் எம்மா ஜோனா மால்ம்கிரெனை தோற்கடித்து வினேஷ் போகத் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Tags : World Wrestling Championships ,Vinesh Phogat , World Wrestling Championships: Vinesh Phogat wins bronze
× RELATED சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா,...