×

வட்டி விகிதத்தை 0.7% ஆக உயர்த்தியது நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ; இன்று முதல் அமல்..!!

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி பி.எல்.ஆர். எனப்படும் பிரதான வட்டி விகிதத்தை 0.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதுவரை 12.75 சதவீதமாக இருந்த பிரதான வட்டி விகிதம் 0.7 சதவீதம் உயர்வின் காரணமாக 13.45 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல் அடிப்படை வட்டி விகிதத்தையும் 8 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாக பாரத் ஸ்டேட் வங்கி உயர்த்தியுள்ளது. இதனால் அடிப்படை விகிதத்தில் கடன் வாங்கிய கடனாளிகளுக்கு EMI தொகை உயரும். வட்டி விகிதத்தை உயர்த்தியதால் வீடு, வாகனக்கடன், தனி நபர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வட்டி விகித உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகள் கடன்களை வழங்குவதற்கான பழைய அளவுகோல்கள் இவை. இப்போது பெரும்பாலான வங்கிகள் வெளிப்புற பெஞ்ச்மார்க் அடிப்படையிலான கடன் விகிதம் அல்லது ரெப்போ அடிப்படையில் கடன்களை வழங்குகின்றன. வங்கி பி.எல்.ஆர். மற்றும் அடிப்படை விகிதம் இரண்டையும் காலாண்டு அடிப்படையில் திருத்துகிறது. எஸ்பிஐ-யின் கடன் வட்டி விகித திருத்தம் வரும் நாட்களில் மற்ற வங்கிகளிலும் பின்பற்றப்படும்.

Tags : SBI , Interest rate, 0.7%, SBI
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...