சிறிய அதிர்ஷ்டம் இருந்தால் டி20 உலக கோப்பையை இந்தியா வெல்ல முடியும்: கவாஸ்கர் பேட்டி

மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷமி, 15 பேர் கொண்ட பட்டியலில் சேர்க்கப்படாததால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுபற்றி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டி: அணி தேர்ந்தெடுக்கப்பட்டதும், அது நமது இந்திய அணி, நாம் அனைவரும் அதை ஆதரிக்க வேண்டும். தேர்வுகள் மற்றும் புறக்கணிப்புகளை நாங்கள் கேள்வி கேட்கக்கூடாது,

ஏனெனில் இது சில வீரர்களின் மனச்சோர்வை ஏற்படுத்தும். சிறிய அதிர்ஷ்டம் இருந்தால், ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வீட்டிற்கு கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories: