×

திருவள்ளூர் அருகே இருளர் குடியிருப்பில் கட்டப்பட்டிருந்த தீண்டாமை சுவர் இடிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை

திருவள்ளூர்: சன் நியூஸ் செய்தி எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் வாழவந்தான்கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த தீண்டாமை சுவர் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் முன்னிலையில் இடிக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை அடுத்த தச்சூர் ஊராட்சிக்குட்பட்ட வாழவந்தான்கோட்டையில் சுமார் 75 இருளர் குடும்பங்கள் 29 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இந்த குடியிருப்பை சுற்றி பாஸ்கர் ராவ் என்பவர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை விற்க முயற்சித்த பாஸ்கர் ராவ், அந்த பகுதி வழியே இருளர் இன மக்கள் செல்லக்கூடாது என்பதற்காக 7 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பினார்.

இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் குடியிருப்புகளில் தேங்குவதாக இருளர் மக்கள் வேதனை தெரிவித்தனர். இது தொடர்பான செய்தி சன் நியூஸில் வெளியானது. அதில் சுற்றுச்சுவரை அகற்றி தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று இருளர் இன மக்களின் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் செய்தியின் எதிரொலியாக நிகழ்விடத்திற்கு சென்ற ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள், இருளர் குடியிருப்பில் அமைக்கப்பட்டிருந்த தீண்டாமை சுவரை இடித்து அகற்றினர். 


Tags : Thiruvallur , Tiruvallur, Irular Residence, Inviolability Wall
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...