×

திருட்டை தடுக்க பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும் சட்டவிரோத மணல் திருட்டு நடைபெறுவது எப்படி? ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: மணல் திருட்டை தடுக்க பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும், மணல் திருட்டு நடப்பது எப்படி? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் திருட்டு என்பது இருக்கக்கூடாது எனவும், மணல் திருட்டை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம், சாணிபிரட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகரன் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாடு, கேரளா எல்லைப் பகுதியில் அமராவதி ஆறு உருவாகிறது.

அமராவதி ஆறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்திற்கு குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்கிறது. அமராவதி ஆற்றின் கரையில் 10 முதல் 15 அடி ஆழம் வரை தொண்டி மணல்கள் திருடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளைக் கொண்டும் ஆற்றுக்கு செல்வதற்கு பாதைகள் அமைத்து ஆற்று மணலை திருடி வருகின்றனர். சட்டவிரோதமாக ஆற்று மணலை திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுக்கவும், மணல் எடுப்பதற்காக ஆற்றில் போடப்பட்ட பாதையை அகற்றி உத்தரவிட வேண்டும். என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதன்படி கோர்ட்டு உத்தரவிட்டும் சட்டவிரோத மணல் திருட்டு நடைபெறுவது எப்படி? .தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் திருட்டு என்பதே இருக்கக் கூடாது.தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : ICOURT , How can illegal sand theft take place when various orders are issued to prevent theft? ICOURT BRANCH QUESTION
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு