ஆலந்தூர், நங்கநல்லூர் பகுதியில் அண்ணா பிறந்தநாள் விழா

ஆலந்தூர்: அண்ணாவின் 144 வது பிறந்தநாளையொட்டி, ஆலந்தூர், நங்கநல்லூர் பகுதிகளில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து உணவு, இனிப்பு வழங்கினர். சென்னை ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக சார்பில், ஆலந்தூர் சட்டமன்ற அலுவலகம் அருகில் ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக செயலாளர் பி.குணாளன் தலைமையில் நடந்த விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். விழாவில் வட்ட செயலாளர்கள் கே.பி.முரளிகிருஷ்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆர்டி.பூபாலன், சீனிவாசன் குப்புசாமி, முன்னாள் கவுன்சிலர் பாபு குமார், சச்சீஸ்வரி, மணப்பாக்கம் ரவி, முனுசாமி, காஜாமொய்தீன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நங்கநல்லூரில் 167வது  வட்ட செயலாளர் ஜெ.நடராஜன் தலைமையில் நடந்த விழாவில், ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் கலந்துகொண்டு அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கினார்.

166வது வட்டத்தில் வட்ட செயலாளர் இ.உலகநாதன் தலைமையிலும் 162வது வட்டத்தில் கவுன்சிலர் சாலமோன் தலைமையிலும் 164 வது வட்டத்தில் ஜெ.ஏசுதாஸ் தலைமையிலும் அண்ணா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் கலந்துகொண்டு அண்ணா, பெரியார் படங்களுக்கு மாலை அணிவித்துவிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு, உணவு வழங்கினார். இதில் ஆர்.பாபு, அபிஷேக் ரமணா, கேபிள் ராஜா, வெள்ளைச்சாமி, பாலசந்திரன், தில்லை வெங்கடேசன், சந்திரசேகர், ரமணா, எஸ்.காந்த், விமல், மகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: