ப.சிதம்பரம் பிறந்த நாள்: தி.நகர் ஸ்ரீராம் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள்

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு, தி.நகர் ஸ்ரீராம் ஏற்பாட்டில் சென்னையில் பல்வேறு இடங்களில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. முன்னாள் ஒன்றிய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் காங்கிரசார் அவரது பிறந்த நாளை ஏழை, எளிய மாணவ, மாணவியர் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட உள்ளனர்.

 அதன்படி சென்னையில், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட பொருளாளர் தி.நகர் ஸ்ரீராம் ஏற்பாட்டில் இன்று தி.நகர் ஜி.என்.ஷெட்டி ரோட்டில் உள்ள லிட்டில் பிளவர் கான்வெண்ட் பள்ளியில் மதிய உணவு வழங்கப்படுகிறது. அதை தொடர்ந்து மேற்கு மாம்பலம் காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் தாய்மார்களுக்கு புடவை மற்றும் இரவு சிறப்பு உணவு வழங்கப்படுகிறது. நாளை காலை சென்னை பள்ளிப்பட்டில் உள்ள சேவா சமாஜம் குழந்தைகள் காப்பகத்தில் காலை அன்னதானம் வழங்கப்படுகிறது.

அதை தொடர்ந்து வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் நாளை மாலை பெசன்ட் நகர் வரசித்தி விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தி.நகர் ஸ்ரீராம் செய்துள்ளார்.

Related Stories: