×

உலக கோப்பை டி20 தொடர்; அக்டோபர் மாதம் 23 ம் தேதி நடக்கிறது இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி.!

டெல்லி: இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும் இந்தியா தனது முதல் போட்டியில் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

இந்த போட்டி ஆஸ்திரேலியவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்ட்டுள்ளது .மேலும் ஒட்டுமொத்தமாக அனைத்து போட்டிகளுக்கும் இதுவரை 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐசிசி அறிக்கையில் மேலும் கூறுகையில் ; ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கபட்டத்தில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில், இந்த உலகக் கோப்பை தவிர்க்க முடியாத நிகழ்வாக அமைகிறது. இன்னும் சில டிக்கெட்டுகள் உள்ளன, எனவே ரசிகர்கள் தங்களுடைய டிக்கெட்டை பாதுகாப்பதை உறுதிசெய்ய வேண்டும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : World Cup T20 Series ,India ,Pakistan , World Cup T20 Series; The India-Pakistan match will be held on October 23.
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!