காஞ்சிபுரம் இட்லி

தாளிக்க:

வாணலியில் சிறிது நெய் விட்டு, முந்திரியை பொன்னிறமாக வறுத்து, மாவில் சேர்க்கவும். பிறகு, மேலும் சிறிது நெய் விட்டு, கடுகு, சீரகம், மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து மாவில் சேர்க்கவும்.

செய்முறை

பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் மூன்று மணி நேரம் ஊற விட்டு, பின் அரைத்துக் கொள்ளவும். இட்லிக்கு அரைப்பதுபோல, குடைய குடைய அரைக்காமல் கொஞ்சம் கொதகொதப்பாக அரைத்து பின், எட்டு மணி நேரம் புளிக்க விடவேண்டும். அத்துடன் கெட்டித்தயிர் மற்றும் உப்பு கலந்து விடவும். இட்லிப்பானையில் சின்ன சின்னக் கிண்ணங்களில் நெய் தடவி, அதில் மாவை விட்டு, வேக வைத்து எடுக்கவும். கிண்ணத்தில் மந்தார இலை வைத்தும் வேக விடலாம். சுவை அமோக ருசியாய் இருக்கும்.

Related Stories:

More
>