அதிமுகவில் பிளவுபட்டுள்ள அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்பது எனது விருப்பம்; சசிகலா பேட்டி

தஞ்சாவூர்: அதிமுகவில் பிளவுபட்டுள்ள அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்பது எனது விருப்பம் என்று தஞ்சையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கூறினார்.

தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு சசிகலா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க.வில் பிளவுப் பட்டு உள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இந்த நாளில் நான் இதை சபதமாக ஏற்கிறேன்.

அதிமுகவில் அனைவரும் நிச்சயமாக ஒன்றாக இணைவோம். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பி.எஸ். சரியாக தான் சொல்லி இருக்கிறார். நாங்கள் அனைவரும் ஒன்றாக தான் இருக்கிறோம். இதுதான் தொண்டர்களின் விருப்பம். எங்கள் கட்சியின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்,  ஆகையால் அவரை ஓ.பி.எஸ். பார்த்திருக்கலாம். தொண்டர்கள் நினைத்தால் கட்சித் தலைமையை நான் ஏற்க தயாராகவுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தஞ்சை பரிசுத்த நகரில் உள்ள சசிகலாவின் வீட்டு வளாகத்திற்குள் வைக்கப்பட்டு இருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் சசிகலா தான் என்று தொண்டர்கள் உற்சாகத்துடன் கோஷங்கள் எழுப்பினர்.  பேட்டியின் போது தென்சென்னை மாவட்ட செயலாளர் M.N.பாலு என்கிற பாலசுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் R.T.முருகானந்தம் (திருவையாறு), தஞ்சை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு V.S. கவாஸ்கர் மற்றும் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Related Stories: