×

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள்: திருவுருவ உருவ சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை..!!

சென்னை: திமுக என்ற கட்சியை உருவாக்கி அது, இன்று 70 வருடங்களை கடந்தும், தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றாக இருக்க காரணகர்த்தாவாக இருக்கும் மூலவேர் அண்ணாதுரை பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. திமுக ஆட்சியில் இருந்தாலும் அதிமுக ஆட்சியில் இருந்தாலும் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். சி.என்.எ. என்ற 3 எழுத்தால் தமிழ்நாட்டு அரசியலை புரட்டி போட்ட அண்ணாதுரையின் 114-வது பிறந்த நாள்  இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் முப்பெரும்விழாவாக திராவிட கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.
 
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை:


முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை நெல்பேட்டையில் இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி. சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை:


பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர். அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நாமக்கல்லில் அண்ணா சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். புதுக்கோட்டையில் அண்ணா சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அண்ணா சிலைக்கு திமுக நிர்வாகிகள் மரியாதை:

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செய்தனர். தயாநிதிமாறன் எம்.பி., முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மரியாதை செலுத்தினார். சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு அவர் மரியாதை செலுத்தினார்.

டிடிவி தினகரன்:

அண்ணாவின் 114-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார். கோவை அண்ணா சாலை பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு டி.டி.வி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி:

அண்ணாவின் 114-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியபோது ஈபிஎஸ்-ஐ வரவேற்க 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சாலையில் குவிந்தனர்.  அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் அண்ணா சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சசிகலா:

அண்ணாவின் 114-வது பிறந்தநாளை ஒட்டி தஞ்சாவூரில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வேன் எனவும் ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு தலைமையேற்பேன் எனவும் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம்:

அண்ணாவின் 114-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். அண்ணா சிலைக்கு வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.


Tags : Guru Anna ,Chief Minister ,M.K. Stalin , Perarirjan Anna, birthday, M.K. Stalin, E.P.S., O.P.S.
× RELATED மோடியின் அப்பட்டமான சதித்திட்டத்தை...