ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 போட்டி; மவுண்ட் சியோன் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி சாதனை

புதுக்கோட்டை: மவுண்ட் சியோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி புதுக்கோட்டை தேசிய அளவிளான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 போட்டியில் மூன்றாவது முறையாக வென்றது. இந்த ஆண்டு, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த போட்டியில் தங்கள் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர். இப்போட்டியில், புதுக்கோட்டையில் உள்ள மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்கள் 35 அணிகளாக கலந்து கொண்டனர். இதில் 4 அணிகள் ஐஐடி, என்ஐடி, மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 1997 குழுக்களுடன் தொழில்துறை பிரச்னைகளுக்கு புதுமையான தீர்வுகளை முன்மொழிந்து இறுதிப் போட்டிக்கு சென்றது.

இந்தியா லிமிடெட் மத்தியப் பிரதேச காவல்துறை, VOLVO, AICTE MIC மாணவர் கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கான சிறந்த தீர்வை முன்மொழிந்ததற்காக மவுண்ட் சியோனின் 4 அணிகள் முதல் பரிசான ரூ.1 லட்சத்தை வென்றது. புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மட்டுமே தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தப் பரிசை வென்று சாதனை படைத்துள்ளது.மவுண்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் புளோரன்ஸ் ஜெயபாரதன், இயக்குநர் டாக்டர் ஜெய்சன் கே. ஜெயபாரதன் முதல்வர் டாக்டர்.பி.பாலமுருகன், கல்வி ஒருங்கிணைப்பாளர் விவியன் ஜெய்சன், மவுண்ட் சீயோன் கல்லூரியின் ஐசிடி டாக்டர் ராபின்சன் எஸ். ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான். 2022 ல் மாணவர்களின் மகத்தான முயற்சிகள் மற்றும் புதுமையான செயல்திறனுக்காக தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Related Stories: