ஜெய்ஷ் -இ-முகமது இயக்க தலைவர் மவுலானா மசூத் அசார், பாகிஸ்தானில் இருப்பதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் தகவல்

காபூல்: ஜெய்ஷ் -இ-முகமது இயக்க தலைவர் மவுலானா மசூத் அசார், பாகிஸ்தானில் இருப்பதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். ஜெய்ஷ் -இ-முகமது இயக்க தலைவர் மவுலானா மசூத் அசாரை கைது செய்யுமாறு ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது.  

இந்நிலையில் மவுலானா மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இல்லை எனவும் பாகிஸ்தானில் தான் உள்ளார் எனவும் தாலிபன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆஃப்கானிஸ்தானின் நங்கர்ஹர், கன்ஹார் பகுதிகளில் ஜெய்ஷ் -இ-முகமது இயக்க தலைவரான மவுலானா மசூத் அசார் இருக்கலாம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் இத்தகைய பொய்யான குற்றசாட்டுகள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படலாம் என ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எந்த ஆதாரமும் ஆவணங்களும் இல்லாத இதுபோன்றவையான குற்றச்சாட்டுகளை தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் எனவும் இதுபோன்ற ஊடக குற்றச்சாட்டுகள் இருதரப்பு உறவுகளை மோசமாக பாதிக்கும் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

Related Stories: