×

தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி ஆகியவை இன்புளுயன்சா காய்ச்சலின் அறிகுறிகள் எனவும் காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளிடம் இருந்து மற்ற குழந்தைகள் விலகி இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மேலும் கடந்த 2 ஆண்டுகளில் முகக்கவசம் உள்ளிட்டவை பின்பற்றப்பட்டதால் காய்ச்சல் குறைவாக இருந்தது, படுக்கைகள் இல்லாமல் மருத்துவமனைகள் நிரம்பி  வருவதாக கூறுவது தவறான தகவல் எனவும் அவர் கூறினார்.

தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் இன்புளுயன்சா காய்ச்சலானது இருமல் மற்றும் தும்மல் மூலமாக வெளியாகும் நீர் திவலைகள் வழியாக பரவுகிறது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Minister ,Ma. Subramanian , 282 children affected by influenza in Tamil Nadu are receiving treatment: Minister M. Subramanian informed
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...