×

வேலுமணி வீட்டு முன்பு திரண்டு தகராறு 7 அதிமுக எம்எல்ஏக்கள் உட்பட 390 பேர் மீது வழக்கு

கோவை: கோவையில் லஞ்ச ஒழிப்பு சோதனையின்போது எஸ்.பி. வேலுமணி வீட்டு முன்பு திரண்ட 7 அதிமுக எம்எல்ஏக்கள் உட்பட 390 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோவை சுகுணாபுரம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது போலீசாரை பணி செய்யவிடாமல் தடுக்கும் வகையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் குவிந்தனர். கட்சியினரை வரவழைத்து வீட்டின் முன் போலீசார் விசாரணைக்கு செல்வதை தடுக்கும் வகையில் கோஷமிட்டனர். கேட் முன் நின்று போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.

குனியமுத்தூர் போலீசார் வீட்டின் முன் குவிந்த அதிமுக எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜூனன், பிஆர்ஜி அருண்குமார், தாமோதரன், கந்தசாமி, அமுல் கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், ஏ.கே.செல்வராஜ் ஆகிய 7 பேரை கைது செய்தனர். இவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் 7 எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களுடன் இருந்த கட்சி நிர்வாகிகள் உட்பட 390 பேர் மீது சட்ட விரோதமாக ஒன்று கூடுதல் பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : Velumani , A case against 390 people including 7 AIADMK MLAs for gathering and arguing in front of Velumani's house
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...