எம்கேபி நகர் பகுதியில் வாலிபரிடம் பணம் பறித்த ரவுடி சிறையில் அடைப்பு

பெரம்பூர்: எம்கேபி நகர் 12வது மத்திய குறுக்கு தெருவை சேர்ந்தவர் முகமது மஸ்தான் (59). இவர், நேற்று முன்தினம் மாலை முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றபோது மர்ம நபர் ஒருவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி மஸ்தானிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறித்து சென்றார். இதுகுறித்து முகமது மஸ்தான் கொடுத்த புகாரின்படி, எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வியாசர்பாடி ஏ.கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி முனியப்பன் (25) என்பவர்தான் முகமது மஸ்தானிடம் வழிப்பறி செய்தது தெரிந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முல்லைநகர் சுடுகாடு அருகே பதுங்கியிருந்த முனியப்பனை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முனியப்பன் மீது வியாசர்பாடி, எம்கேபி நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 13க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

Related Stories: