இந்தியாவுடன் டி20 தொடர் ஆஸி. அணி அறிவிப்பு

சிட்னி: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்க உள்ளது. முதல் டி20 போட்டி மொகாலியில் செப். 20ம் தேதியும், 2வது போட்டி நாக்பூர் (செப். 23), 3வது போட்டி ஐதராபாத்திலும் (செப். 25) நடைபெற உள்ளன. போட்டிகள் அனைத்தும் இரவு 7.30க்கு தொடங்கி நடைபெறும். உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அணியில் மொத்தம் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தொடக்க வீரர் வார்னருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டிம் டேவிட், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேடு, கேமரான் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ், ஷான் அபாட், ஆஷ்டன் ஏகார், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசல்வுட், ஜோஷ் இங்லிஸ், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், ஆடம் ஸம்பா.

Related Stories: