ரஷ்யா ஆக்கிரமிப்பில் இருந்து உக்ரைன் கார்கிவ்வை மீட்டது: உக்ரைனில் உக்கிர தாக்குதல்களால் ரஷ்ய படைகள் ஓட்டம்

கீவ் : ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து கார்கிவ் நகரத்தை மீட்டிருக்கும் உக்ரைன் படையினர் அதன் தொடர்பான காட்சிகளை வெளியிட்டு இருக்கின்றனர். உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யாவின் படைகள் பல்வேறு நகரங்களை கைபற்றி இருந்தன. இழந்த நகரங்கள் மீண்டும் தன் வசமாக உக்ரைன் ராணுவம் கடந்த வாரம் முதல் உக்கிர தாக்குதல் நடத்தி வந்தது. முதலில் உக்ரைனின் தெற்கில் இரண்டு குடியேற்றங்களில், கிழக்கு உக்ரைனில் மூன்றில் ஒரு பகுதியும் உக்ரைன் படை கைப்பற்றியது. இதையடுத்து கார்கிவ் நகரத்தை குறிவைத்து படைகளை நடத்திய உக்ரைன் ராணுவம் கடந்த சில நாட்களாக தாக்குதல்களை தீவிரப்படுத்தியது.

அமெரிக்கா அளித்துள்ள அதிநவீன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. உக்ரைன் படையினரின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் ரஷ்ய படைகள் கார்கிவில் இருந்து வெளியேறிவிட்டன. இதையடுத்து முக்கிய நகரங்களின் ஒன்றான கார்கிவ்வை உக்ரைன் படைகள் கைப்பற்றி இருக்கின்றனர். உக்ரைன் பதிலடியால் அதிர்ச்சி அடைந்துள்ள ரஷ்ய ராணுவம் வான்வெளி தாக்குதலில் ஈடுபடலாம் என்பதால் கார்கிவ்வில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கார்கிவ் பகுதியை மீட்டுள்ள ராணுவத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ள அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் ரஷ்யா கட்டுப்பாட்டில் இருக்கும் மற்ற நகரங்களும் அதிரடி நடவடிக்கைகள் மூலம் மீட்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். 

Related Stories: