சென்னை விமான நிலையத்தில் 12 பழைய விமானங்களை அகற்றும் பணிகள் தொடக்கம்

சென்னை : சென்னை விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள செயல்பாட்டில் இல்லாத விமான நிறுவனங்களை சேர்ந்த 12 பழைய விமானங்கள் அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வருகின்ற நிலையில் போதுமான இட வசதி இல்லாத காரணத்தால் புதிய விமான நிலைய கட்டுமான பணி ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் விமான நிலையத்தில் பழைய விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த விமானங்களை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், செயற்பாட்டில் இல்லாத 12 பழைய விமானங்களை கிங் பிஷர், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் விமானங்கள் சுமார் 10 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.

இதனால், அதிகாரிகள் அதில் உள்ள உதிரி பாகங்களை தொழில் நுட்ப வல்லுநர்களைக் கொண்டு தனித்தனியா பிரித்தெடுத்து முழுமையாக அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். செயல்பாட்டில் இல்லாத 12 பழைய விமானங்களில் பறவைகள் கூடுகட்டி மற்ற விமான போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் கூடுதல் விமானங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாத நிலையில் செயல்பாட்டில் இல்லாத விமானங்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டும் இதுபோன்று 5 விமானங்களை அகற்றினர். எனவே,செயற்பாட்டில் இல்லாத விமானத்தின் உதிரி பாகங்கள் மீண்டும் விமானத்தில் பொருத்தக்கூடிய நிலையில் இருப்பதால் தொழில் நுட்ப வல்லுநர்களை கொண்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டு அதில் உள்ள பாகங்களை அகற்றும் பணியில் உள்ளனர். மேலும், இத்தனை ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத விமான நிறுவனத்திடம் இதற்கான தொகையும் வசூலிக்க சென்னை விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: