சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதே சிற்பி திட்டத்தின் நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதே சிற்பி திட்டத்தின் நோக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறுவர்களை சமூக பொறுப்பும், ஒழுக்கமும் மிக்கவர்களாக சிற்பி திட்டம் மாற்றும். மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காக சிற்பி திட்டத்தை தமிழக காவல்துறை முன்னெடுத்துள்ளது. சிறார் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. சிறார்கள் குற்றம் அதிகரிக்க குடும்ப வறுமை, பொருளாதார நிலையே காரணமாக உள்ளது. காவல்துறையும், மக்களும் இணைந்து செயல்பட வேண்டும். சுய ஆளுமை திறன், பெற்றோர் பேச்சை மதித்து நடப்பது உள்ளிட்ட பண்புகளை உருவாக்க வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories: