திரு.வி.க. நகரில் உள்ள குடிநீர் வாரிய அலுவலக பணிமனை இடமாற்றம்: வாரியம் தகவல்

சென்னை: திரு.வி.க. நகரில் உள்ள குடிநீர் வாரிய அலுவலக பணிமனை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: திரு.வி.க நகரில் உள்ள சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின், பகுதி அலுவலகம் 6க்கு உட்பட்ட உதவி பொறியாளர் அலுவலக பணிமனை 66 தற்போது கதவு எண்.2/3, ஜவஹர் நகர் 3வது சர்க்குலர் சாலை, 2வது குறுக்கு தெரு, ஜவஹர் நகர், சென்னை-82 என்ற முகவரியில் இயங்கி வந்தது.

இந்த பணிமனை அலுவலகம், இன்று (14ம் தேதி) முதல் புதிய முகவரியான ஜவஹர் நகர் கழிவுநீரகற்று நிலையம், கதவு எண்.10, சிவ இளங்கோ சாலை, ஜவஹர் நகர், சென்னை - 600 082 என்ற இடத்தில் செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் சம்பந்தப்பட்ட புகார்கள் மற்றும் குடிநீர் வரி, கட்டணம் செலுத்தவும் இந்த புதிய முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தொடர்புகொள்ள உதவிப் பொறியாளரின் 81449 30066 என்ற எண்ணையும், துணை பகுதிப் பொறியாளரின் 81449 30216 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: