சாதி சான்று குறித்த கோப்புகளை தாமதமின்றி வழங்க அமைச்சர் உத்தரவு

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் மெய்த்தன்மை வழங்குதல் குறித்த ஆய்வு கூட்டம்  நடைபெற்றது. மாநில கூர்நோக்கு குழுக்களில் நிலுவையில் உள்ள பழங்குடியினர் சாதி சான்று மெய்த்தன்மை குறித்த கோப்புகள்  காலதாமதமின்றி பரிசீலித்து முடிவெடுக்குமாறும், அத்தகைய நிலுவையில் உள்ள கோப்புகளை ஒழுங்குபடுத்தி  விரைந்து முடிக்கவும்,  இது  தொடர்பாக தொடர் ஆய்வு மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அமைச்சர்  ஆலோசனை வழங்கினார். ஆய்வு கூட்டத்தில் ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி ஜவஹர், கூடுதல் செயலாளர் பழனிசாமி,  பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை கலந்து கொண்டனர்.

Related Stories: