×

மருத்துவமனைக்கு ஒன்றாக சென்ற வீடியோ வைரல் பிரபாஸ், அனுஷ்கா மீண்டும் இணைந்தனர்

ஐதராபாத்: மருத்துவமனைக்கு ஒன்றாக சென்றதால் பிரபாஸ், அனுஷ்கா மீண்டும் இணைந்துவிட்டதாக பேசப்படுகிறது. பில்லா படத்தின்  தெலுங்கு ரீமேக்கில் பிரபாசுடன் நடித்தார் அனுஷ்கா. அதைத் தொடர்ந்து பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் பிரபாசுடன் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தகவல் பரவியது. இதை இருவருமே மறுக்கவில்லை. இந்நிலையில் பிரபாசின் குடும்பத்தார் இந்த காதலை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தை சமாதானப்படுத்தும் வேலைகளில் பிரபாஸ் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே பிரபாசின் முயற்சி பலனளிக்கவில்லை என்றும் அனுஷ்காவுடன் அவரது காதல் முறிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில்தான் பிரபாசின் பெரியப்பாவும் முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நடிகருமான கிருஷ்ணம் ராஜு சில தினத்துக்கு முன் காலமானார். அவரது இறுதி சடங்கில் அனுஷ்கா கலந்துகொண்டார். பிரபாஸ், அனுஷ்கா காதலுக்கு பிரபாசின் குடும்பத்தில் ஆதரவாக இருந்தவர் ஒருவர்தான், அவர் கிருஷ்ணம் ராஜு என கூறப்படுகிறது. கிருஷ்ணம் ராஜு இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, பிரபாசும் அனுஷ்காவும் சேர்ந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு கிருஷ்ணம் ராஜுவை பார்த்துள்ளனர். பிறகு இருவரும் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் காட்சியை ரசிகர் ஒருவர் செல்போனில் படமாக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போதுதான் வெளியே கசிந்துள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் பிரபாஸ், அனுஷ்கா மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக தகவல் பரவ ஆரம்பித்துள்ளது.

Tags : Prabhas ,Anushka , Prabhas, Anushka Reunited After Video Goes Viral To Hospital Together
× RELATED மக்களவை தேர்தலால் பிரபாஸ் படத்துக்கு சிக்கல்