பாங்காக் செல்கிறார் அஜித்

சென்னை: படப்பிடிப்புக்காக பாங்காக் செல்ல இருக்கிறார் அஜித். வலிமை படத்துக்கு பிறகு மீண்டும் போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இதில் அஜித் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். காமெடி கேரக்டரில் யோகி பாபு நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிலிருந்து கிடைத்த இடைவெளியில் லடாக் சென்றிருக்கிறார் அஜித். அங்கு பைக் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் புத்தர் கோயிலுக்கும் கார்கில் போர் நினைவிடத்துக்கும் அவர் சென்று வந்தார்.

இந்நிலையில் இம்மாத இறுதியில் மீண்டும் படப்பிடிப்பில் அவர் பங்கேற்கிறார். வினோத் படத்தில் முக்கிய ஆக்‌ஷன் காட்சிகளில் அஜித் நடிக்க வேண்டியுள்ளது. இந்த சண்டை காட்சியை பாங்காக்கில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக அக்டோபர் முதல் வாரத்தில் பாங்காக்கிற்கு செல்ல படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வெளிநாட்டு ஸ்டன்ட் கலைஞர்களுடன் இந்த சண்டை காட்சியில் அஜித் பங்கேற்க இருக்கிறாராம். இதையடுத்து அக்டோபர் இறுதிக்குள் இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு டிசம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி விரைவில் போனி கபூர் அறிவிப்பார் என தெரிகிறது.

Related Stories: