×

பெரும் இழுபறிக்குப் பிறகு கென்யா அதிபராக ரூடோ பதவியேற்பு

நைரோபி: கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது.  இதில், எதிர்க்கட்சி வேட்பாளர் ராய்லா ஒடிங்காவை விட மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில்  வில்லியம் ரூடோ  வெற்றி பெற்றார். இதை எதிர்த்து கென்ய உச்ச நீதிமன்றத்தில் ராய்லா தாக்கல் செய்த வழக்கு, கடந்த வாரம்  தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து,  கென்யாவின் 5வது அதிபராக ரூடோ நேற்று பதவியேற்றார். அதிபராக  இருந்த  உஹுரு கென்யாட்டாவு ரூடோ  நேற்று பதவியேற்பு விழாவில்  கைகுலுக்கி பேசிக் கொண்டனர். இதை பார்த்து மக்கள் ஆரவாரம் செய்தனர். அப்போது  தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மக்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இதில் பலர் காயமடைந்தனர்.

Tags : Rudo , Rudo sworn in as Kenyan president after huge tussle
× RELATED பெரும் இழுபறிக்குப் பிறகு கென்யா அதிபராக ரூடோ பதவியேற்பு