×

அத்தியாவசிய பட்டியலில் 34 புதிய மருந்து: ஏற்கனவே இருந்த 26 நீக்கம்

புதுடெல்லி: முக்கிய நோய்களுக்கான மருந்துகளை அத்தியாவசிய பட்டியலில் ஒன்றிய அரசு சேர்த்து வருகிறது. இந்த மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுவதையும், பதுக்கி விற்பதை தடுக்கவும் இது செய்யப்படுகிறது. இந்த தேசிய அத்தியாவசிய மருந்து பட்டியல், 276 மருந்துகளுடன் கடந்த 1996ம் ஆண்டு வகுக்கப்பட்டது. பின்னர் 2003, 2011, 2015ம் ஆண்டுகளில் இந்த மருந்து பட்டியல் திருத்தப்பட்டது. தற்போது, 4வது முறையாக திருத்தம் செய்யப்பட்ட பட்டியலை ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், ``அனைத்து தரப்பினருக்கும் கட்டுப்படியான விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்காக, ஒன்றிய அரசு இந்த பட்டியலை  தயாரித்து வருகிறது. தற்போது, 34 கூடுதல் மருந்துகளுடன் திருத்தப்பட்ட பட்டியலில் 384 மருந்துகள் இடம் பெற்றுள்ளன. புற்றுநோய், தொற்று நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. முந்தைய பட்டியலில் இருந்து 26 மருந்துகள் நீக்கப்பட்டுள்ளன ,’ என்று தெரிவித்தார்.


Tags : 34 new drugs in essential list: deletion of 26 existing ones
× RELATED விதிகளுக்கு மாறாக நியமனம் செய்ததாக...