×

ரேஷன் திட்டத்தில் மோசடி: 198 பேர் கைது

சென்னை: தமிழககூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழக அரசு பொது விநியோகத்திட்டம்  சிறப்பு பொது விநியோக திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசிய பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். இதுபோன்ற தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 29.8.2022 முதல் 4.9.2022 வரையுள்ள ஒரு வார காலத்தில் ரூ.5,21,961 மதிப்புள்ள 924 குவிண்டால் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 32 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றச் செயலில் ஈடுபட்ட 198 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Scam in ration scheme: 198 people arrested
× RELATED போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல்: முதியவர் கைது