×

அதிமுக அலுவலகத்தில் வன்முறை காவல்துறை பதிலளிக்க வேண்டும் சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஜே.சி.டி.பிரபாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்த நாளன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பன்னீர்செல்வம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயற்சித்ததாகவும், அடியாட்களுடன் அலுவலகம் முன் கூடிய எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களான தி.நகர் சத்யா, விருகை ரவி, ஆதி ராஜாராம் உண்மை இவ்வாறு இருக்க, தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக அளித்த புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த  நீதிபதி இளந்திரையன், உள்துறை செயலாளர், டிஜிபி , ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் சென்னை சிபிசிஐடி ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை  செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Madras High Court ,ADMK , Madras High Court orders police to respond to violence at ADMK office
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு