சிறப்பு டிஜிபி மீதான வழக்கு செல்போன் நிறுவன ஊழியர்கள் சாட்சியம்

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர் மீதான வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நேற்று நடந்தது. அப்போது, அரசு தரப்பு சாட்சிகளான தடய அறிவியல் துறையை சேர்ந்த மணிவண்ணன், காஞ்சிபுரம் போலீஸ்காரர் பூபதி, செல்போன் நிறுவன ஊழியர்கள் ஜெயக்குமார், சதீஷ் என 4 பேர் சாட்சியம் அளித்தனர். இந்த சாட்சியங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதி புஷ்பராணி, விசாரணையை நாளைக்கு (15ம் தேதி) ஒத்திவைத்தார்.

Related Stories: