ஆர்டிஐ மனுவுக்கு சாக்குபோக்கு பதில் மருந்து தர கட்டுப்பாடு அமைப்புக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியாக பதில் அளிக்காத ஒன்றிய மருந்துகள் தர கட்டுப்பாடு அமைப்பிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றிய மருந்துகள் தர கட்டுப்பாடு அமைப்புக்கு சவுரவ் தாஸ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பிய மனுவில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கு உலக சுகாதார அமைப்பு தடை விதித்தது தொடர்பான விவரங்களை கேட்டார். இதற்கு பதில் அனுப்பிய மருந்துகள் தர கட்டுப்பாடு அமைப்பின் மக்கள் தொடர்பு அதிகாரி,  ‘நீங்கள் கேட்ட எந்த தகவல்களும் இல்லை’ என்று ஒற்றை வரியில் பதில் அனுப்பினார். இதனை தொடர்ந்து மனுதாரர், தலைமை தகவல் ஆணையத்திடம் புகார் செய்தார். இதன் அடிப்படையில். சரியான முறையில் பதில் அளிக்காத தகவல் தொடர்பு அதிகாரிகளை கண்டித்துள்ள தலைமை தகவல் ஆணையம், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படியும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், தகவலை மறுத்த காரணத்துக்காக ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் கேட்டுள்ளது.

Related Stories: