‘ராகிங்’ கொடுமையால் பல்கலை. மாணவர் தற்கொலை: அரியானாவில் அதிர்ச்சி

சண்டிகர்: அரியானாவில் ராகிங் கொடுமையால் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் சன்ஸ்கர் சதுர்வேதி (19), வணிக நிர்வாகவியல் படிப்பு படித்து வந்தார். குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த அவர், அவரது விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் சன்ஸ்கர் சதுர்வேதி மர்மான முறையில் விடுதியில் இறந்து கிடந்தார். தகவலறிந்த போலீசார், மாணவரின் சடலத்தை விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் மாணவரின் சடலம்  சோனிபட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவரின் பெற்றோர் கூறுகையில், ‘கல்லூரியில் படித்த சக மாணவர்களின் ‘ராகிங்’ கொடுமையால் சன்ஸ்கர் சதுர்வேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் ராகிங் அதிகமாக இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்தார். எனவே, சன்ஸ்கர் மரணத்தின் பின்னணி விசாரிக்கப்பட வேண்டும்’ என்றனர்.

Related Stories: