சென்னை ஐகோர்ட் வக்கீலிடம் செல்போன் திருடிய சிறுவன்

அண்ணாநகர்: சென்னை பாடியை சேர்ந்தவர் முகமது மன்சூர்(45). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவர் நேற்று மாலை குடும்பத்துடன்  திருமங்கலத்தில் ஒரு பிரபல வணிக வளாகத்தில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சினிமா பார்ப்பதற்காக டிக்கெட் எடுக்க வரிசையில் காத்திருந்தார். அப்போது இவரது செல்போனை ஒருவர் திருடிச் சென்றதை கண்டு  கடும் அதிர்ச்சி அடைந்தார்.

 இதன்பின்னர் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்த போது சிறுவன் ஒருவர், வக்கீலின் சட்டை பாக்கெட்டில் இருந்து செல்போனை லாவகமாக திருடிச் சென்றது தெளிவாக பதிவாகியிருந்தது. இதுகுறித்து முகமது மன்சூர் கொடுத்த புகாரின்படி, திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: