×

துணை நடிகை கொடுத்த பாலியல் புகார்; அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது: ரகசிய இடத்தில் வைத்து விசாரணை

சென்னை: துணை நடிகை கொடுத்த பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மணிகண்டனை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு பதியப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசாா் கைது செய்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாய கருகலைப்பு செய்ததாகவும் துணை நடிகை புகார் கூறியிருந்தார். 
துணை நடிகையின் புகாரின் பேரில் 6 பிரிவுகளின் கீழ் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது. மணிகண்டனின் ஓட்டுநர், உதவியாளர், தனிபாதுகாப்பு அதிகாரியிடம் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை, ராமநாதபுரமங உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் தொடர்ந்து தேடி வந்த நிலையில் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். 

The post துணை நடிகை கொடுத்த பாலியல் புகார்; அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது: ரகசிய இடத்தில் வைத்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : Minister ,Manigandon ,Chennai ,Manikandan ,Minister of State ,Manikandon ,Dinakaran ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்