புதிய அட்டர்னி ஜெனரலாக முகுல் ரோத்தகி நியமனம்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த மாதம் 1ம் தேதி பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது. ஒன்றிய அரசின் மூத்த வழக்கறிஞரும், அட்டர்னி ஜெனரலுமான கே.கே.வேணுகோபாலின் (91) பதவிக்காலம் கடந்த ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், மீண்டும் அவரது பதவியை ஒன்றிய அரசு நீடித்தது. இவ்வாறாக கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் தனது பதவியை நீடிக்க வேண்டாம் என்று கே.கே.வேணுகோபால் ஒன்றிய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் ஒன்றிய அரசின் மூத்த வழக்கறிஞரான முகுல் ரோத்தகி, அடுத்த புதிய அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த மாதம் 1ம் தேதி ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் பதவியை ஏற்பார். இவர் ஏற்கனவே கடந்த 2014 முதல் 2017ம் வரை ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: