பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை ஓராண்டிற்குள் அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: சென்னை அடையாறில் பக்கிங்காம் கால்வாய் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆர்.ஏ புரம் பக்கிங்காம் கால்வாயிலும் ஏராளமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் மழை காலங்களில் வெள்ள நீர் வீதிகளுக்கு வந்து விடுவது வழக்கமாகும். சென்னை அடையாறில் பக்கிங்காம் கால்வாய் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 2014-ல் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பக்கிங்காம் கால்வாய் 2009-ம் ஆண்டு தேசிய உள்நாட்டு நீர்வழித்தடமாக அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பொதுப்பணித்துறை பக்கிங்காம், அடையாறு, கூவம் அருகில் உள்ள 4 ஆயிரத்துக்கு அதிகமான ஆக்கிரமிப்புகளை அகற்றபட்டதாக தெரிவித்தனர்.

கால்வாயை சீரமைக்க ரூ.1281 கோடி ரூபாய் பொதுப்பணிப்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தது. பக்கிங்காம் கால்வாய் எல்லைகளை 6 மாதத்திற்குள் வரையறுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை தவறும் பட்சத்தில் தொடர்புடைய அதிகாரிகளே பொறுப்பு என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஓராண்டிற்குள் அகற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. கால நீட்டிப்பு கிடையாது என்றும் மீண்டும் ஆக்கிரமிப்பு நேராதபடி நடவடிக்கை தேவை என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஆக்கிரமிப்பை எதிர்த்து தொடரப்படும் வழக்குகள் வேறு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ள கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: