×

உணவு பொருள்களின் பணவீக்கம் 7.62% உயர்வு: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..!!

சென்னை: உணவு பொருள்களின் பணவீக்கம் 7.62 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்க விவரங்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7 சதவீதம் உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்கள் விலை அதிகமாக இருப்பதே சில்லறை பணவீக்கம் உயர்ந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. பணவீக்கம் 2 சதவீதம் முதல் 6 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்பதே ரிசர்வ் வங்கி வைத்துள்ள வரம்பு.

ஆனால், ஆகஸ்ட் மாதத்துடன் எட்டு மாதங்களாக தொடர்ந்து பணவீக்கம் வரம்புக்கு மேலே உள்ளது. அதிலும், ஆகஸ்ட் மாதம் பணவீக்கம் உயர்ந்துள்ளது. சில்லறை பணவீக்கத்தில் உணவு பணவீக்கமே பெரும் பகுதி வகிக்கிறது. ஆகஸ்ட் மாதம் உணவு பணவீக்கம் 7.62 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் பணவீக்கம் குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

இப்பொழுது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது. பணவீக்கம் என்னுடைய தலையான கவலை அல்ல என்று சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர் அறிவித்தார். அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லறைப் பணவீக்கம் 7 சதவீதம் என்று உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Tags : P ,Chidambaram ,Union Finance Minister ,Nirmala Sitharaman , Food, Inflation, Nirmala Sitharaman, P. Chidambaram
× RELATED பாஜக அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல;...