×

வேம்புலி அம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள ஸ்ரீமத் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீவேம்புலி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி மற்றும் யாத்திரை உற்சவம் கடந்த 2ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் அபிஷேகம் மற்றும் அம்மன் புறப்பாடு நிகழ்ச்சியுடன் தொடங்கி, 3ம் தேதி சனிக்கிழமை அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து நாள்தோறும் அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடைபெற்று வந்தது.

இறுதி நாளான நேற்றுமுன்தினம் காலை புஷ்ப அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு மேல் கோயிலில் இருந்து புஷ்ப அலங்காரத்துடன் புறப்பட்ட வேம்புலி அம்மன் காக்களூர் சாலை, குளக்கரை சாலை, பஜார் வீதி, முகம்மது அலி தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற வீதி உலாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைத்து தெருக்களிலும் பக்தர்கள் தீபாராதனை செய்து வழிபட்டனர்.

ஜாத்திரை விழாவை முன்னிட்டு சிறப்பு தாரை தப்பட்டை, திருப்பதி பேண்ட் வாத்தியம், வாணவேடிக்கையும், பொய்க்கால் குதிரை, நையாண்டி மேளம், கரகாட்டம், கேரள செண்டை மேளம், காஞ்சி கைச்சிலம்புடன் ஜாத்திரை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர், சேவா சங்கம், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Jatra festival ,Vempuli Amman Temple , Jatra festival at Vempuli Amman Temple
× RELATED பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை பகுதிகளில் ஜாத்திரை திருவிழா கோலாகலம்