காக்களூரில் புதிய மின்மாற்றி, மின்தூக்கி: கிருஷ்ணசாமி எம்எல்ஏ இயக்கி வைத்தார்

திருவள்ளூர்: காக்களூர் துணை மின் நிலையத்தில் குறைந்த மின்னழுத்தத்தை சரிசெய்யவேண்டும் என்று பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமிக்கு மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து காக்களூர் துணை மின்நிலையத்தில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் பிரேக்கர் எனப்படும் மின்தூக்கி அமைக்கப்பட்டது. சக்தி நகரில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.

இதன் துவக்க விழா மின் வாரிய செயற்பொறியாளர் கனராஜன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் எம்.பர்க்கத்துல்லாகான், ஒன்றிய கவுன்சிலர்கள் தா.எத்திராஜ், டி.கே.பூவண்ணன், மின்வாரிய உதவி செயற் பொறியாளர் ஜானகிராமன், உதவி பொறியாளர்கள் என்.பாலாஜி, ஏ.தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தனர். திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், ஒன்றிய நிர்வாகிகள் கே.கே.சொக்கலிங்கம், கி.தரணி, சாமுண்டீஸ்வரி சண்முகம், சீனிவாசன்,  டி.எம்.ராமச்சந்திரன், பரமேஸ்வரன், எஸ்.என்.குமார், தா.சுகுமார், எஸ்.சௌந்தர்ராஜன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

இதில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ கலந்துகொண்டு மின்மாற்றி மற்றும் மின் தூக்கி எனப்படும் பிரேக்கர் மற்றும் சக்தி நகரில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய மின்மாற்றியை இயக்கிவைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். இதில் திமுக நிர்வாகிகள் வி.ஜே.உமாமகேஸ்வரன், தா.சுகுமார், அருண்கீதன், திராவிட தேவன், எம்.டி.பாலாஜி, செந்தில், கதிர், பிரபு, சங்கர், மீராசா, கருணாகரன், கிருஷ்ணன், தியாகு, ராஜி, சண்முகம், சிவப்பிரகாசம், சதீஷ், சக்திவேல், புருஷோத்தமன் கலந்து கொண்டனர்.

Related Stories: