பொதுமக்களிடம் தகராறு தட்டிக்கேட்ட ஓட்டுநரை வெட்டிக் கொல்ல முயற்சி: 7 பேருக்கு வலை

திருவொற்றியூர்: எண்ணூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் தங்கராஜ்(36). லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் அருகே சென்றபோது பின்னால் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதில் தலை, உடல் முழுவதும் பலத்த வெட்டு காயமடைந்த தங்கராஜ் ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் குடித்துவிட்டு பொதுமக்களிடம் தகராறு செய்து வந்தது. இதை தங்கராராஜுவின் நண்பர்கள் தட்டி கேட்டுள்ளனர். இவர்களுக்கு தங்கராஜு ஆதரவளித்துள்ளார். இதனால்  ஆத்திரமடைந்த அந்த கும்பல் தங்கராஜியை வீட்டு வாசலில் வெட்டி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இது சம்பந்தமாக தங்கராஜ் அளித்த புகாரின்பேரில் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், முனி, அஜித், தேசப்பன் மற்றும் இவர்களது கூட்டாளிகள் உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: