×

ஆலந்தூர் மண்டல குழு கூட்டம்: பல்வேறு பிரச்னை குறித்து விவாதம்

ஆலந்தூர்: ஆலந்தூர் 12வது மண்டல மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மன்றக்கூடத்தில் நேற்று நடந்தது. இதில் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன் தலைமை வகித்தார். மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்களின் கூட்டத்தின் விவாதம்: பிருந்தாஸ்ரீ முரளிகிருஷ்ணன்: எனது வார்டுக்கு உட்பட மாதவபுரம் வேம்புலி அம்மன் கோயில் தெருக்களில் சாலை பணிகளை விரைவில் துவங்க வேண்டும். அதேபோல் மரக்கிளைகளை உடனே வெட்டவேண்டும். சாலமோன்: கண்ணன் காலனி, மாரீசன் தெரு போன்ற இடங்கள் மழைநீர் கால்வாய் பணிக்காக தொண்டப்பட்ட பள்ளங்களை சரி செய்ய வேண்டும்.

துர்காதேவி நடராஜன்: எனது வார்டுக்கு உட்பட்ட நங்கநல்லூர் பகுதிகளில் மரக்கிளைகளை வெட்ட ஆட்கள் இல்லை, என்பதால் நாங்களே சொந்த செலவில் மரக்கிளைகளை வெட்டுகிறோம். எனவே ஆட்களை நியக்கவேண்டும், விடுபட்ட மழைநீர் கால்வாய்ப்பணிகளை முடித்து தர வேண்டும். அமுதபிரியா செல்வராஜ்: மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள பழுதடைந்த தண்ணீர் தொட்டியால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதனை இடிக்கவேண்டும். பூங்கொடி ஜெகதீஸ்வரன்: எனது வாடுக்கு உட்பட்ட பகுதியில் மழை நீர் கால்வாய்பணி டெண்டர் விட்டும் நடைபெறவில்லை. ஒப்பந்ததாரரை அனுகி பணியைத் துவக்கவேண்டும். பழுதடைந்த 86 மேன் வோல்களை மாற்றித்தர வேண்டும்.

செல்வேந்திரன்: எனது வார்டியில் மழைநீர் கால்வாய் பணிக்காத பள்ளம் தோண்டுவிட்டு முடிக்காமல் சென்று விடுகின்றனர். ஒப்பந்ததாரரை தட்டி கேட்டால் மிரட்டும்தொணியில் பதிலளிக்கிறார். இடிந்துவிழும் நிலையில் உள்ள பள்ளிக்கூடத்தை கட்டித்தர வேண்டும். பாரதி வெங்கடேஷ்: சுகாதாரப் பிரிவினர் மாடுகளைப் பிடிக்கும்போது சினைமாடு, கன்று குட்டிகளை பிடிக்கத்தடை விதிக்க வேண்டும். கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன் பேசும்போது, ‘‘அனைத்து வார்டுகளிலும் மழைநீர் கால்வாய்களை மழைக்காலத்திற்குள் முடிக்கவேண்டும்.

கவுன்சிலர்களை மிரட்டும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதாரத்துறையினர் மாடுகளை பிடிக்கும்போது சினை மாடு மற்றும் கன்று குட்டிகளை பிடிக்கக்கூடாது. மாடு பிடிப்பதில் அவசரம் காட்டும் அதிகாரிகள் நாய்கள் கடிக்கும் என்பதால் அவற்றை பிடிப்பதில்லையா? நாய்களையும் பிடிக்க வேண்டும். அதிகாரிகள் ஆய்வுசெய்யும் இடங்களில் உள்ள பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும்” என்றார்.


Tags : Aalandur Zonal ,Committee ,Meeting , Alandur Zonal Committee Meeting: Discussion on various issues
× RELATED பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்