டி20 உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு

மும்பை: ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்.16 முதல் நவ.13ம் தேதி வரை நடைபெற உள்ளது. அவற்றில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள்  தங்கள் அணிகளை ஏற்கனவே அறிவித்து விட்டன.இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையில் 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதில் தமிழக வீரர்கள் அஷ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பும்ரா,ஹர்ஷல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.  காயம் காரணமாக ஜடேஜாவுக்கு வாய்ப்பு இல்லை. கூடுதல் வீரர்களாக ஷமி, ஸ்ரேயாஸ், பிஷ்னாய், தீபக் சாஹர் ஆகியோர்  அறிவிக்கப்பட்டுள்ளனர்.அணி விவரம்: ரோகித்(கேப்டன்), ராகுல்(து.கேப்டன்),  கோஹ்லி, அஷ்வின், சூரியகுமார்,  ஹூடா,  ஹர்திக், அக்சர்,  ரிஷப், தினேஷ்(விக்கெட் கீப்பர்கள்), சாஹல், பும்ரா, புவனேஸ்வர், ஹர்ஷல், அர்ஷ்தீப்.

Related Stories: