×

114வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்: திமுக தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: அண்ணாவின் 114வது பிறந்த நாளான வரும் 15ம் தேதி மதுரையில் அவரது  சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சி தந்த காவியத் தலைவர்-உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர்-தமிழ் மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ் நாட்டின் சிறப்புக்காகவும் வாழ் நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர்-கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர்- “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்று தம்பிமார் பெரும்படையைக் கண்டு, நெஞ்சுயர்த்தி பெருமிதம் கொண்ட பெருமகன் - “மெட்ராஸ் ஸ்டேட்” என்ற பெயரை “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப் பெரும் தனயன்- சுயமரியாதை சுடரொளி-சொக்க வைக்கும் சொற்பொழிவாளர்-எழுத்து வேந்தர்-தென்னகத்தின் மிகப் பெரும் அரசியல் தலைவர்- பேரறிஞர் அண்ணாவின் 114வது ஆண்டு பிறந்த நாளான வரும் 15ம் தேதி காலை 7 மணி அளவில் மதுரை, கீழவெளி வீதி- மேலவெளி வீதி சந்திப்பு, நெல்பேட்டை பகுதியில் உள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

Tags : Anna ,Madurai ,BC ,K. Stalin ,Kanjagar Chief Corporation , MK Stalin to garland Anna statue in Madurai on 114th birth anniversary: DMK leadership announcement
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...