×

ஆத்தூர் அதிமுக எம்எல்ஏ போலீசில் புகார் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு சசிகலா மாலை அணிவிக்க எதிர்ப்பு

சேலம்: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்க அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து ஆத்தூர் எம்எல்ஏ போலீசில் புகார் கொடுத்து தடுத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ெஜயலலிதாவின் தோழி சசிகலா, தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து நேற்று மாலை சேலம் வந்தார். தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி என வரும் வழியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு சசிகலா மாலை அணிவிக்க அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதனை தடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு வியூகம் வகுத்திருந்தது.

இதன்படி, ஆத்தூர், தலைவாசல், வீரகனூர் பகுதியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு சசிகலா மாலை அணிவிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, போலீசில் புகார் கொடுத்தனர். ஆத்தூர் அதிமுக எம்எல்ஏ ஜெய்சங்கரன், ஆத்தூர் டவுன் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். எடப்பாடி தரப்பினரின் புகாரால் நேற்று மாலை தலைவாசல் வந்த சசிகலா, வண்டியை விட்டு கீழே இறங்காமல், மேலே இருந்தபடியே பேசினார். ஆத்தூரில் பேசும்போது, கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் தருவதற்காக எடப்பாடிக்கு முதல்வர் பதவி வழங்கினேன். வேற்றுமைகளை மறந்து அனைவரும் செயலாற்ற வேண்டும் என்று கூறினார்.

Tags : Aathur Adhikhaka ,MLA ,GG ,Jayalalithah ,Sasigala , Aathur AIADMK MLA complains to police against Sasikala's garlanding of MGR, Jayalalithaa statue
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...