×

அயோத்தியில் ரூ1,800 கோடியில் ராமர் கோயில்: அறக்கட்டளை கூட்டத்தில் அறிவிப்பு

அயோத்தி: அயோத்தியில் ரூ.1,800 கோடியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று அதற்கான அறக்கட்டளை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை, அதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது. இதுதொடார்பாக  ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘அறக்கட்டளை சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ராமஜென்ம பூமி வளாத்தில் மகத்தான மனிதர்கள், துறவிகளின் சிலைகளும் வைக்க அனுமதிக்கப்பட்டது.

தொழில்நுட்ப நிபுணர்கள் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் ரூ.1,800 கோடி செலவில் ராமர் கோயில் கட்டப்படும். அறக்கட்டளை கூட்டத்தில் அறக்கட்டளை தொடர்பான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டன. ராம ஜென்மபூமி வளாகத்தில் பிரமாண்ட கோயிலின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அடுத்தாண்டு டிசம்பருக்குள் கட்டுமானப் பணிகள் முடிந்து, 2024 ஜனவரிக்குள் (மகர சங்கராந்தி) கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும்’ என்றார்.

Tags : Ramar Temple ,Ayodhya , Ram temple at Rs 1,800 crore in Ayodhya: Trust meeting announcement
× RELATED கம்பராமாயண நுணுக்கங்கள்